Latestமலேசியா

தாஸ்மேனியாவில் கரையொதுங்கிய திமிங்கிலங்களைக் காப்பாற்ற தீவிர முயற்சி

தாஸ்மேனியா, செப் 22 – ஆஸ்திரேலியாவின் தீவு மாநிலமான தாஸ்மேனியா (Tasmania)வில் கரையொதுங்கிய 270 திமிங்கிலங்களில் மூன்றில் ஒரு பகுதி இறந்து விட்டதாகவும் மேலும் பல திமிங்கிலங்கள், இறந்து விடலாம் என அஞ்சப்படுவதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று நூற்றுக்கணக்கான திமிங்கிலங்கள், தாஸ்மேனியாவில் கரையொதுங்கின. எதனால் அவை கரைக்கு இழுத்து வரப்பட்டன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

எஞ்சியுள்ள திமிங்கிலங்களைக் காப்பாற்றி அவற்றை ஆழ்கடலில் கொண்டு போய் சேர்ப்பதற்கான தீவிர முயற்சியில் கடல்வாழ் உயிரின மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஆயினும் எல்லோரும் எண்ணுவது போல் இது அத்தனை சுலபமான காரியம் அல்ல என கடல்சார் உயிரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தாஸ்மேனியா கடற்கரை பகுதிகளில் திமிங்கிலங்களைக் காண்பது வழக்கமானதுதான். எனினும் இவ்வளவு அதிகமான திமிங்கிலங்கள் கரையொதுங்குவது கடந்த பத்தாண்டுகளில் இதுவே முதன் முறை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!