Latestமலேசியா

தீ விபத்தில் தாயும் இரு பிள்ளைகளும் உயிர் தப்பினர்

பூச்சோங், செப் 16 – தாமான் பூச்சோங் பிரிமாவிலுள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கிக் கொண்ட தாயும் அவரது இரண்டு பிள்ளைகளும் தீயணைப்புப் படை வீரர்களால் காப்பாற்றப்பட்டனர். இன்று காலை மணி 8,15அளவில் தகவல் அறிந்து தீயணைப்பு படையில் நிகழ்விடத்திற்கு சென்றனர்.
சமையல் அறையில் ஏற்பட்ட தீயினால் கரும்புகை சூழ்ந்ததால் 31 வயதுடைய பெண்மணியும் அவரது 9 வயது மகளும் மற்றும் ஒரு வயது மகனும் அவ்வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் இயக்குனர் நோரஷாம் காமிஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
பூச்சோங் மற்றும் சைபர்ஜெயாவிலிருந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டின் முதல் மாடியில் உள்ள முற்றத்திலிருந்து வீட்டின் வெளியிலிருந்து ஏணியை பயன்படுத்தி அவர்களை பாதுகாப்புடன் மீட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!