Latestமலேசியா

தெனாகா நேஷனலின் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார் ம.இ.கா-வின் டத்தோ ரவிசந்திரன்

கோலாலம்பூர், அக் 17 – ம.இ.கா-வின் முன்னாள் செனட்டர் டத்தோ ரவிச்சந்திரன் தெனாகா நேஷனலின் நிறுவனத்தின் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று தொடங்கி 2 ஆண்டுகளுக்கு அவர் அப்பொறுப்பில் இருப்பார்.

காஜாங் ரவி என அழைக்கப்படும் இவர் 1985ஆம் ஆண்டு தொடங்கி ம.இ.கா-வின் உறுப்பினராக இணைந்து தொகுதி, மாநில மற்றும் தேசிய நிலையில் கட்சியின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

2007-2010 வரை செனட்டராகவும் பணியாற்றியுள்ள டத்தோ ரவிசந்திரன் இரு முறை பத்து கேவ்ஸ் சட்டமன்றத்திலும் போட்டியிட்டுள்ளார். தமது நியமனத்திற்கு கட்சியின் தேசிய தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கும் துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ சரவணனுக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் டத்தோ ரவிச்சந்திரன்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!