Latestமலேசியா

தேசிய தடுபூசி போடும் திட்டம் இன்று தொடங்குகிறது

கோலாலம்பூர், பிப் 24 – திட்டமிடப்பட்டதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே கோவிட்-19 தொற்றை முடிவுக்கு கொண்டுவரும் தேசிய தடுப்பூசி போடும் திட்டம் இன்று மாலை மணி 3க்கு மேல் தொடங்குகிறது. நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முதல் நபராக பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் விளங்குவார். அவருக்கு அடுத்து சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தடுப்பூசியை போட்டுக்கொள்வார். அதன் பின் இன்று தொடங்கி ஏப்ரல் மாதம்வரை முதல் கட்டமாக ஐந்து லட்சம் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் இயக்கம் தொடங்கும். ஏப்ரல் மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை 60 லட்சம் மேற்பட்டவர்களுக்கும் , மே மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசி போடும் நடவடிக்கை நடைபெறும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!