
கோலாலம்பூர், பிப் 24 – தேசிய தடுப்பூசி போடும் திட்டத்திற்கான இலக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்வரை இருந்தாலும் இவ்வாண்டு இறுதிக்குள் இது முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி மருந்துகள் திட்டமிட்டபடி நாட்டிற்கு வந்தடைந்தால் சுகாதார அமைச்சின் விவேகம் மற்றும் எல்லாத் துறையிலும் அதன் ஆற்றலின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கட்டத்தைவிட தடுப்பூசி போடும் திட்டம் விரைவாக முழுமையடையும். தேசிய தடுப்பூசி திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் இதனை தெரிவித்தார்.