Latestமலேசியா

தேசிய பாதுகாப்பு மன்றத்தில் இதர துறைகளின் நிபுணர்களும் இடம் பெறவேண்டும் டாக்டர் சேவியர் வலியுறுத்து

கோலாலம்பூர், அக் 17- தேசிய பாதுகாப்பு மன்றத்தில் பல இன சமயங்களைச் சேர்ந்தவர்களுடன் இதர துறைகளின் நிபுணர்களும் இடம் பெறவேண்டும். மற்ற சமுகத்தினர்களின் கலச்சார்ம் தொடர்பான விவகாரங்களை பரிசீலிப்பதற்கு இத்தகைய நிபுணர்கள் அதில் இடம்பெற வேண்டியது மிகவும் அவசியம் என கோலாலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்,
கோவிட்-19 பரவலை தடுப்பதில் அனைவருக்கும் அக்கரை உண்டு. அதே வேளையில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை மற்றும் மீட்சிக்கான நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின்போது அமல்படுத்தப்படும் விதிமுறைகள் மக்கள் பின்பற்றக்கூடியதாக இருக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு மன உளைச்சலையும் சிரமத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது என பி,கே,ஆர் கட்சியின் உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் வலியுறுத்தினார்.
முஸ்லிம் அல்லாதாரின் திருமணத்தில் அறுவருக்கு மேல் கூடக்கூடாது என்ற நிபந்தனையை அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என டாக்டர் சேவியர் வலியுறுத்தினார். மணமக்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கூடினாலும் புரோகிதர் இல்லாமல் திருமணத்தை நடத்துவற்கு இந்து சம்பிரதாயங்களும் அனுமதிப்பதில்லை. மக்கள் இயல்பு வாழ்க்கை தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டும். திருமணங்களுக்கு 20 பேர் அல்லது அதற்கு மேற்படோர் பங்கேற்பதற்கு அனுமதிக்க வேண்டும் என டாக்டர் சேவியர் வலியுறுத்தினார்.
அதோடு இன கலச்சார மற்றும சமய கூறுகளுக்கு மதிப்பளித்து இயற்றப்படும் விதிமுறைகளாக தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சீரான செயலாக்க நடைமுறைகளுக்கு அனுமதித்தால் அது மக்களிடையே மேலும் வரவேற்பை பெறமுடியும். எனவே பாதுகாப்பிற்கான முதன்மை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இந்த விவகாரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என டாக்டர் சேவியர் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!