Latestவிளையாட்டு

தேசிய ஸ்குவாஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பட்டத்திற்கு சிவசங்கரி இலக்கு

கோலாலம்பூர், அக் 4- புக்கிட் ஜாலில் தேசிய ஸ்குவாஸ் விளையாட்டரங்களில் இம்மாதம் 6ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதிவரை நடைபெறவிருக்கும் தேசிய ஸ்குவாஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெற்றியாளர் பட்டத்தை வெல்வதற்கு எஸ்.சிவசங்கரி குறிவைத்துள்ளார்.
2018ம் ஆண்டு மகளிர் ஒற்றையர் பிரிவில் வெற்றியாளர் பட்டத்தை வென்ற சிவசங்கரி கடந்த ஆண்டு அரையிறுதி ஆட்டத்தில் ரேச்சல் அர்னோலிடம் தொல்வி கண்டார். கோவிட் -19 தொற்று பரவியது முதல் இவ்வாண்டு மார்ச் மாதத்திலிருந்து எந்தவொரு போட்டியிலும் கெடாவைச் சேர்ந்த 21 வயதுடைய சிவசங்கரி வெற்றி பெறவில்லை.
அதோடு கோவிட் தொற்றினால் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. வெளிநாடுகளில் போட்டிகளில் கலந்துகொள்ளாத காரணத்தினால் எந்தவொரு புள்ளியும் இன்றி ரேங்கிங் பட்டியலிலும் பின்தங்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானதாக அவர் சொன்னார்.
விரைவில் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும் என சிவசங்கரி நம்பிக்கை தெரிவித்தார். அதற்கு முன்னதாக தேசிய ஸ்குவாஸ் போட்டியில் முழு திறைமையையும் வெளிப்படுத்தி மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வெல்வதே தமது இலக்கு என அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!