Latestமலேசியா

தைப்பூச விடுமுறையை ரத்துச் செய்ததற்கு கெடா மந்திரி பெசர் பல கதைகளை திரித்து கூறுகிறார் – டத்தோஸ்ரீ சரவணன் சாடல்

கோலாலம்பூர், ஜன 23- கெடா மாநிலத்தில் தைப்பூசத்திற்கான விடுமுறையை ரத்துச் செய்த விவகாரத்தில் அம்மாநில மந்திரிபுசார் முகமட் சனுசி மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் பல்வேறு கதைகளை திரித்துக் கூறிவருகிறார் என ம.இ.காவின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் சாடினார். கோவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்காக MCO அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இம்மாதம் 28 ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத்திற்கு விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக முகமட் சனுசி அறிவித்தார்.

கெடாவில் கடந்த ஏழு ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வந்த தைப்பூச விடுமுறையை ரத்துச் செய்திருக்கும் முகமட் சனுசியின் முடிவு குறித்து மனித வள அமைச்சருமான சரவணன் கடுமையாக சாடியுள்ளார். ஜனவரி 28 ஆம் தேதி தமது தாப்பா தொகுதியில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிக்கு கலந்துகொள்வதற்கு போதுமானோர் ஆர்வமின்றி இருப்பதால் சரவணன் அந்த நிகழ்ச்சியை ரத்துச் செய்துவிட்டதாக முகமட் சனுசி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கத்தில் பாஸ் கட்சி இருந்தாலும் அக்கட்சியின் மற்றொரு கூட்டணி கட்சியான ம.இ.காவை கலந்தாலோசிக்காமலேயே கெடாவில் தைப்பூச விடுமுறையை முகமட் சனுசி ரத்து செய்ததை ம.இ.கா தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தைப்பூச விடுமுறையை ரத்துச் செய்துள்ள சனுசியின் முடிவை எதிக்கட்சியான பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மட்டுமின்றி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் மற்றும் அரசு சார்பற்ற தலைவர்களும் சாடி வருகின்றனர்.

கெடாவின் ஜெனரி சட்டமன்ற உறுப்பினருமான முகமட் சனுசி மக்களை குழப்பம் வகையில் மற்றொரு கதையை திசை திருப்பியுள்ளதாக சரவணன் தெரிவித்தார்.
டிரிலியனுக்கும் பில்லியனுக்கும் வித்தியாசம் தெரியாதவர்தான் ஜெனரி சட்டமன்ற உறுப்பினர் என சரவணன் கூறினார். இரண்டு நாட்களுக்கு முன் கெடாவில் தைப்பூச விடுமுறை ரத்து செய்யப்பட்டதாக அவர் கூறியிருந்தார். இப்போது மேலும் ஒரு புதிய கதையை கூறியுள்ளார். அந்த விடுமுறை இன்னும் ரத்துச்செய்யவில்லை என்றும் விடுமுறை இன்னும் கொடுக்கப்படவில்லை அல்லது பரிசீலிக்கப்படவில்லை என புதிதாக ஒரு கதையை முகமட் சனுசி கூறியிருப்பதாக சரவணன் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டில் தைப்பூச விடுமுறை அறிவிக்கப்படவில்லை என சனுசி கூறியுள்ளார். கடந்த ஆண்டு தைப்பூசம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அப்போது கெடாவுக்கு வார இறுதி விடுமுறையாகும் என சரவணன் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!