Latestமலேசியா

தொடர்பு-பல்லூடக துணையமைச்சருக்கு கோவிட்-19 தொற்று

பெட்டாலிங் ஜெயா, ஜன 13 – தொடர்பு பல்லூடக  துணையமைச்சர்  சஹிடி சய்னூல்  அபிடினுக்கு ( Zahidi Zainul Abidin  ) கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  கடந்த ஜனவரி 11 -ஆம் தேதி பினாங்கிலிருந்து கோலாலம்பூர் வந்தடைந்த  துணையமைச்சர் , கோவிட்- 19 மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டிருந்தார்.

இன்று அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக,  துணையமைச்சரின்  அலுவலகம் அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டது.

சஹிடி சய்னூல்  அபிடின், சுங்கை புலோ மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.   அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமைச்சரவை உறுப்பினர்களில்,  பிரதமர் துறை அமைச்சர் ( பொருளாதாரம் ) முஸ்தாபா முகமட் ,  மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சர்  ரீனா ஹரூன்,  உள்துறை அமைச்சர் ஹம்சா சய்னூடின்  ஆகியோருக்கு கோவிட் -19 தொற்று கண்டிருக்கிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!