Latestமலேசியா

தொலைபேசி வழி அழைத்த ஏமாற்று கும்பலிடம் 24 லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்தார் இல்லத்தரசி!

கோலாலும்பூர், ஆக 16 – இணைய மோசடி கும்பலிடம் 24 லட்சம் ரிங்கிட்டை ஏமாந்து பறிகொடுத்தார் 60 வயது மூதாட்டி ஒருவர்.

இல்லத்தரசியான அம்மூதாட்டிக்குத் தொலைபேசி வாயிலாக அழைத்த நபர் ஒருவர், தாம் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் இருந்து அழைப்பதாகவும், தொலைப்பேசி கட்டண பாக்கி இருப்பதாகவும் அம்மூதாட்டியிடம் கூறியிருக்கின்றார்.

பின்னர் அந்த அழைப்பு குவாந்தான்
போலீஸ் நிலையத்துக்கு மாற்றி விடப் பட்டது போது ஒரு தோரணை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு தம்மை போலீஸ் அதிகாரி என அடையாளம் கூறிக் கொண்ட மற்றொரு நபர், அம்மூதாட்டி சட்டவிரோத பண பரிவர்த்தனையிலும், போலி கடன் பற்று அட்டை வெளியீட்டு
ஈடுபட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

இதனை அப்படியே நம்பிய அந்த மூதாட்டி, பயத்தில் அம்மோசடி கும்பல் கூறியதன்படி, தமது சேமிப்புப் பணமான 24 லட்சம் ரிங்கிட்டை, புதிய வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளார்.

விசாரணைக்குச் சுலபமாக இருக்கும் என்பதால், புதிய வங்கிக் கணக்கின் அனைத்து பாதுகாப்பு விவரங்களையும் தரும்படி அக்கும்பல் கூறவே, அதையும் தந்து, தனது பணமனைத்தையும் பறிகொடுத்தார் அந்த மூதாட்டி.

இதுபோன்று தொலைப்பேசி அழைப்புகள் வந்தால் பதற்றமடைய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர், உடனடியாக காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!