Latestமலேசியா

நஜீப் விவாகரத்தில் உண்மை கசக்கும்- ஆனால் அம்னோ ஏற்க வேண்டும் கைரி ஜமாலுடின்

கோலாலம்பூர், ஆக 1- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் தொடர்பான வழக்கு விவகாரத்தில் உண்மையை ஏற்றுக்கொண்டு கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையை அம்னோ முன்னெடுக்க வேண்டுமென கைரி ஜமாலுடின் கூறினார். இந்த விவகாரத்தில் பொதுமக்களின் கருத்தைத்தான் தாம் வெளிப்படுத்தியதாகவும் நஜீப் மீது தமக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்வு எதுவும் கிடையாது என அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவருமான கைரி தெரிவித்தார். நஜீப்பின் நீதிமன்ற விவகாரத்தை அம்னோவுடன் தொடர்படுத்க்கூடாது என இதற்கு முன் கைரி ஜமாலுடின் கூறியிருந்தது தொடர்பில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஷார்காசி உட்பட பலர் அவரை கடுமையாக குறைகூறியிருந்தனர்.
நான் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறேன். அம்னோ உறுப்பினர்களில் பெரும்பாலோர் நஜீப் தொடர்பான வழக்கு விவகாரத்தில் அவர்கள் நினைத்ததை பயந்துகொண்டு வெளியில் சொல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இதுதான் உண்மை. எனவே நான் பயந்துகொண்டு வாய் திறக்காமல் இருக்க முடியாது . இந்த விவகாரத்தில் உண்மை கசப்பாக இருந்தாலும் நாம் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான கைரி தெரிவித்தார்.
அம்னோவின் மூத்த தலைவரான துங்கு ரசாலியும் என்னைப் போன்றுத்தான் கருத்தை வெளியிட்டார். அதற்காக அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். இப்போது தாமும் இதுபோன்ற விமர்சனத்திறகு உள்ளாகியிருப்பதாக கைரி கூறினார். ஏற்கனவே இளம் தலைவர்களுக்கு வழிவிட்டு நஜீப்பும் அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடியும் விலக வேண்டும் என துங்கு ரசாலி கூறியிருந்ததை அம்னோவைச் சேர்ந்த சிலரால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் கைரி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!