Latestமலேசியா

நாட்டின் கோவிட் தடுப்பூசி திட்டத்திற்கு ஐநா அகதிகள் அமைப்பு ஒத்துழைப்பு

கோலாலம்பூர், பிப் 23 – நாட்டில்  முறையான ஆவணங்கள் இல்லாத குடியேறிகளுக்கும், அகதிகளுக்கும் கோவிட் 19 தடுப்பூசி போடுவது  தொடர்பில் ஐநாவுக்கான அகதிகள் அமைப்பின் உயர் ஆணைய பேராளர்கள்,  இன்று மனிதவள அமைச்சுடன் சந்திப்பு நடத்தினர்.

நாட்டில் கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, முறையான ஆவணங்களைக் கொண்டிருக்காத குடியேறிகளுக்கும் அகதிகளுக்கும்  தடுப்பு மருந்தை செலுத்த  அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதையடுத்து அதிகமான அந்நிய குடியேறிகளும் அகதிகளும்  தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வர, ஐநாவுக்கான அகதிகள் அமைப்பின்  ஒத்துழைப்பு  நாடப்பட்டிருப்பதாக, மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

2020-ஆம் ஆண்டு டிசம்பர் வரையில்,  நாட்டில் ஐநா அகதிகளாக ஒரு லட்சத்து 78- ஆயிரத்து 610 பேர் பதிவு பெற்றுள்ளனர்.  அவர்களில் ஒரு லட்சத்து  54 ஆயிரத்து  30 பேர்  மியன்மார் நாட்டவர்கள்.  ஒரு லட்சத்து ஈராயிரத்து 250 பேர் ரொஹிங்கிய மக்கள் ஆவர்.

இவ்வேளையில், நாட்டில்  இன்னும் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர்  தங்களை இன்னும் பதிந்து கொள்ளாமல் இருப்பதாக மலேசியாவுக்கான ஐநா அகதிகள் அமைப்பு கூறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!