Latestமலேசியா

4 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் சிறுமி மரணம்

கிரிக், பிப் 27 – Jalan Kuala Kangsar – Gerik சாலையின் 55 ஆவது கிலோமீட்டரில் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் 11 வயது சிறுமி மரணம் அடைந்தார். நேற்று நிகழ்ந்த அந்த விபத்தில் பினாங்கு , Seberang Jaya வைச் சேர்ந்த Zara Khayla Khairil Azrul என்ற சிறுமி இறந்ததாக Gerik மாவட்ட போலீஸ் தலைவர் Superintenden Zulkfli Mahmood தெரிவித்தார்.

ஒரு MPV Toyata Sienta வாகனம், Toyata Hilux , சரக்கு ஏற்றப்படாத லோரி மற்றும் மற்றொரு Toyota Harrier SUV வாகனம் ஆகியவவை இந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருந்தன. கிரிக்கிலிருந்து Lenggong கிற்கு ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற Toyota Sienta கட்டுப்பாட்டை இழந்து எதிரேயுள்ள சாலையில் நுழைந்து இதர மூன்று வாகனங்களுடன் மோதியதில் அந்த வாகனத்தின் முன்புறம் உள்ள பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுமி கடுமையான காயத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்ததாக Zulkifli கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!