Latestமலேசியா

நிந்தனை அம்சத்தைக் கொண்ட காணொளி வெளியிட்ட ஆடவரை போலீசார் தேடுகின்றனர்

கோலாலம்பூர், அக் 18- நிந்தனை அம்சத்தை கொண்ட காணொளியை வெளியிட்டதன் தொடர்பில் ஆடவர் ஒருவரை புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்காக தேடி வருகிறது. சிராம்பான் ஜாலான் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் எம்.பி,எஸ் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த ஆடவரை நிந்தனை சட்டத்தின் கீழ் விசாரணைக்காக தேடப்பபடுவதாக குற்றப் புலனாய்வுத்துறையின் இயக்குனர் டத்தோ ஹூசிர் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
ஆட்சியாளர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்புணர்வு மற்றும அல்லது சிறுமைப்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டதால் நிந்தனை சட்டத்தின் 4 (1) விதியின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புக்கிட் அமான் அதிகாரிகள் தெரிவித்தனர். இதர மூன்று குற்றங்கள் தொடர்பாகவும் போலீசாரால் தேடப்பட்டுவரும் இந்த சந்தேகப் பேர்வழி .2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிகிறது. அதோடு இந்த சந்தேகப் பேர்வழி வெளியிட்ட காணொளியை மீண்டும் வெளியிட்டாலோ அல்லது அவற்றை வினியோகித்தாலோ மற்றும் பதிவேற்றம் செய்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹூசிர் எச்சரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!