Latestமலேசியா

நெடுஞ்சாலையின் அருகே கால்வாயில் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

கோலாலம்பூர் ஏப் 26 – காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலையின் 281.9ஆவது கிலோமீட்டருக்கு அருகே உள்ள கால்வாயில் தலைக்கவசம் அப்புறப்படுத்தப்படாத நிலையில் 19 வயது இளைஞரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று காலை 11.30 மணியளவில்  சாலையை மேம்படுத்தும் பணியில்  ஈடுபட்டிருந்த பிளஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் அந்த எலும்புக்கூட்டை கண்டுபிடித்தனர்.

அங்கு மோட்டார் சைக்கிளில் எதுவும் காணப்படவில்லை. அதோடு அவ்விடத்தில் உள்ள சாலை தடுப்பில் மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளான  அறிகுறி எதுவும் தென்படவில்லை என்றும் போலீசார் கூறினர்.

மலாக்கா டுரியான் துங்காலைச் சேர்ந்த அகமட் பாரிட் அகமட் அலாவ்டின் என்பவரின் எலும்புக்கூடு இதுவென போலீசார் அடையாளம் கூறினர்.

ஆகக் கடைசியாக மார்ச் 13ஆம் தேதியன்று தங்கள் குடும்பத்தினர் அகமட் பாரிட்டை சந்தித்ததாக அவரது சகோதரி  அய்டா தமது முகநூலில் தெரிவித்துள்ளார்.

தமது நண்பரைப் பார்ப்பதற்காக தங்காக் செல்வதற்காக  அவர் பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு பிறகு   பாரிட்டிடம் தமது தாயார் தொடர்பு கொண்ட போது அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

விடியற்காலை 3 மணி அளவில் அம்பாங்கிலிருந்து  மலாக்காவிற்கு  பாரிட் புறப்பட்டுச் சென்றதாக அவரது நண்பர் மூலம் அறிந்தோம் என  அய்டா தெரிவித்தார்.

நடமாட்டம் கட்டுப்பட்டு உத்தரவு அமல்படுத்த படுவதற்கு முதல் நாளிருந்து பாரிட் காணவில்லை என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்திருந்தனர் .

நேற்று மாலை மணி  4 அளவில் எனது சகோதரரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகபோலீசார் தெரிவித்த போது தாம் அதிர்ச்சி அடைந்ததாக அய்டா தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!