Latestமலேசியா

நெடுஞ்சாலையில் தரையிறங்கிய இலகு ரக விமானம் : இரு சிங்கப்பூர் விமானிகளுக்கு காயமில்லை

பெட்டாலிங் ஜெயா, நவ 22- ஜோகூர்,  செடெனாக் அருகில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில்,  35 பொனான்சா ரக  பீச்கிராப்ஃட் (Beechcraft model 35 Bonanza) இலகு ரக விமானம் அவசரமாக தரையிறங்கியதை மலேசிய  பொது விமான போக்குவரத்து அதிகாரத்துவ தரப்பு ( CAAM ) உறுதிப்படுத்தியது.

தொழில்நுட்ப கோளாறின் காரணமாக,  மீண்டும் ஜோகூர் பாரு செனாய் அனைத்துலக விமான நிலையத்திற்கு  திரும்ப , சம்பந்தப்பட்ட விமானத்தின் விமானி , காலை மணி 10.40க்கு, போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தைத் தொடர்பு கொண்டிருந்ததாக ,  CAAM அதிகாரத்துவ தரப்பின் தலைமை செயல்முறை அதிகாரி செஸ்டர் வூ தெரிவித்தார்.

பிரிமியர் ஏர் சிங்கப்பூர் (Premier Air Singapore)தரப்புக்குச் சொந்தமான அந்த தனிநபர் விமானம், செனாய் – யிலிருந்து மலாக்காவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது.   அந்த விமானத்தின் இரு சிங்கப்பூர் நாட்டு விமானிகள் பாதுகாப்பாக உள்ளனர்.

நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்காமல் இருக்க, அந்த விமானம் பாதுகாப்பான இடத்தில் தள்ளி  வைக்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள வான் விபத்து விசாரணைப் பிரிவு, இந்த சம்பவத்தை விசாரிக்குமென  CAAM ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!