
அபுஜா பிப் 21 – நைஜீரிய தலைநகர் அபுஜாவுக்கு அருகே ராணுவ விமானம் ஒன்று இன்று விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்த ஏழு ராணுவ உயர் அதிகாரிகள் மாண்டதை நைஜீரிய விமானப் படையின் பேச்சாளர் தெரிவித்தார். இந்த விபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அந்த விமானத்தின் இயந்திரம் செயல் இழந்ததாக விமானி தெரிவித்திருந்தாக அபுஜா விமான நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.