
குவாலா திரங்கானு ; ஜன 13 – தற்போது பகாங்கில் ஏற்பட்டிருக்கும் வெள்ளம், இன்னும் ஒன்றிலிருந்து இரு வாரங்கள் வரை நீடிக்குமென ஐயுறப்படுகிறது.
பகாங் ஆற்று நீர் , வழக்க நிலையைக் காட்டிலும் அதிகம் கரை புரண்டோடியிருப்பதால், அந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக APM -பொது தற்காப்பு படையின் நடவடிக்கைப் பிரிவின் துணை ஆணையர் நோர்ஹஃபிஃபி இஸ்மாயில் ( Norhafifi Ismail ) தெரிவித்தார்.
அத்துடன் தற்போது அம்மாநிலத்தில் பல பகுதிகளைச் சூழ்ந்திருக்கும் வெள்ள நீர் வடியாமல் தேங்கிக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
வழக்கமாக வெள்ள நீர், ஆறு அல்லது கடலுக்குள் வழிந்தோடி வடிந்து விடும் .
ஆனால் பகாங் ஆற்று நீர் கரை புரண்டோடியிருப்பதால், அந்த ஆற்றில் வெள்ள நீர் வழிந்தோடி வடிவதற்கான வாய்ப்பில்லாமல் இருப்பதாக நோர்ஹஃபிஃபி இஸ்மாயில் கூறினார்.
வெள்ள நீர் வடிந்தப் பின்னர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புறவு பணிகள் மேற்கொள்ளப்படுமென்றாரவர்.