Latestமலேசியா

பசி; மெர்சிங் சாலை அருகே உள்ள பழக்கடையில் பழம் சாப்பிட்ட யானைகள்

மெர்சிங், ஆக.1 – ஜொகூர், கோத்தா திங்கி, பத்து மாவாய் அருகே 2 காட்டு யானைகள் சாலையை கடந்து சென்று, அங்கு போடப்பட்டிருந்த பழக்கடையில் பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆபத்து விளைவிக்கும் விதமாக வாகனங்களுக்கு மத்தியில் குறுக்கே அவ்விரு யானைகளும் கடந்து சென்று கொண்டிருந்தன.
பின்னர் அங்கு போடப்பட்டிருந்த பழக்கடையில் புகுந்து பழங்களை சாப்பிடும் காட்சி அக்காணொளியில் பதிவாகியுள்ளது. தான் பழக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, திடீரென்று அந்த 2 காட்டு யானைகள் புகுந்து பழங்களை சாப்பிட்டதில் 1000 ரிங்கிட் நஷ்டம் ஏற்பட்டதாக அக்கடையின் 52 வயது உரிமையாளர் கூறியதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஹுசின் சமோரா தெரிவித்தார். இச்சம்பவத்தினால் பாதுகாப்பு கருதி வானகமோட்டிகள் வேகத்தைக் குறைத்துக் கொண்டு சென்றனர்.
இதற்கு முன், இத்தகைய காட்டு யானையால் தாக்கப்பட்டு மரண சம்பவங்களும் பதிவாகியுள்ளது என ஹுசின் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து இவ்விரு யானைகளின் நடமாட்டம் குறித்து வனவிலங்கு பூங்காத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!