Latestசினிமா

விஜய்-இன் மாஸ்டர்; பல்வேறு மொழிகளில் வெளியீடு காண்கிறது

இந்தியா, டிச 3 – இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியிட போவதில்லை, மாறாக திரையரங்களில் மட்டுமே வெளியிடப்படும் என படக்குழுவினர் கூறியுள்ளனர். ஆனால், இப்படத்தை வெளியீடு செய்வதற்கான முறையான திகதியை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இதற்கிடையில், இப்படம் தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளிலும் மொழிமாற்ற பெயர்ப்பு செய்து ஒரே நேரத்தில் இப்படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக படக்குழுவினர் கூறினர்.

‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ஹிந்தி மொழிமாற்ற பெயர்ப்பு உரிமையை வாங்குவதற்கு பிரபல முன்னனி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர்.

இப்படம் ஒரே நேரத்தில் பல்வேறு மொழிகளில் வெளியாகவிருப்பதால் மிகப்பெரிய வசூல் சாதனையைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் எதிர்வரும் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகும் என நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!