Latestமலேசியா

பள்ளிக்கு அருகேயுள்ள கால்வாயில் 500 கிலோ முதலை பிடிபட்டது

மீரி, நவ 12 –லிம்பங் நகரில் பள்ளிக்கூடத்திற்கு அருகேயுள்ள கால்வாயில் இருந்த 500 கிலோ எடை கொண்ட முதலை பிடிபட்டது. 5 மீட்டர் நீளம் கொண்ட அந்த முதலை லிம்பாங் சென்ட் எட்மன்ட் தேசிய பள்ளிக்கு அருகே உள்ள கால்வாயில் காணப்பட்டது.

லிம்பாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர்களின் உதவியோடு பிடிக்கப்பட்ட அந்த முதலை கால்வாயிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு லோரியில் ஏற்றி பாதுகாப்பான மற்றொரு இடத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது. அந்த முதலையின் உடலில் சுடப்பட்டதற்கான காயமும் இருந்ததாக தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.

லிம்பாங் ஆற்றோரத்திற்கு அருகே லிம்பாங் நகர் இருப்பதால் அந்த ஆற்றிலிருந்து இந்த முதலை வந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. உப்பு நீர் வகையைக் கொண்ட இந்த முதலை 70 ஆண்டுகள் வரை ஆயுளைக் கொண்டது என்பதோடு 8 மீட்டர் நீளத்திற்கு வளர்ந்து 1,300 கிலோவரை எடையைக் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!