Latestமலேசியா

பள்ளிக்கூடங்களை மூடுவது குறித்து மாநில அரசாங்கங்களே முடிவெடுக்கட்டும் – லிம் கிட் சியாங்

கோலாலம்பூர் , நவ 16- கோவிட் -19 பெருந்தொற்று கால கட்டத்தில் பள்ளிக்கூடங்களும், பல்கலைக்கழகங்களும் திறந்திருப்பதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் எடுத்திருக்க வேண்டும்.

கடந்த பத்து மாதங்களாக, கோவிட் பெருந்தொற்றை எதிர்கொண்ட அனுபவத்திலிருந்து அரசாங்கம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். கல்வி தொடர்பில் சரியான முடிவை அரசாங்கம் எடுத்திருக்க வேண்டுமென,  DAP கட்சியின் ஆலோசகரான லிம் கிட் சியாங் தெரிவித்தார்.

எல்லா நிலைகளிலும் ஏற்றவொரு தீர்வு இல்லை என்பதை இந்த பெருந்தொற்று நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. கல்விக் கூடங்களை மூடும் முடிவு,  மாணவர்கள், ஆசிரியர்கள்,  குடும்பத்தினர் ஆகிய தரப்பினர்களுக்கு மட்டும்  பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. மாறாக, பெரிதளவில் பொருளாதார- சமூக விளைவினை அது ஏற்படுத்தக் கூடுமென, இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரையில், பாடசாலைகளைக் தொடர்ந்து மூடுவது சாத்தியமல்ல. எனவே,  கடுமையான நடைமுறைகளுடன் மீண்டும் பள்ளிகளைத் திறக்கலாமென்றாரவர்.

குறிப்பாக, வகுப்பறைகளில்  மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது அல்லது இரு வாரங்களுக்கு ஒரு முறை பள்ளிக்கூடங்களைத் திறக்கலாமென அவர் பரிந்துரைகளை முன் வைத்தார். மேலும் , பள்ளிக்கூடங்களை மூடும் முடிவை , மாநில அரசாங்கங்களிடம் விட்டு விட வேண்டுமெனவும்  அவர் குறிப்பிட்டார்.

பள்ளிகள் தொடர்ந்து திறந்திருப்பது தொடர்பாக முடிவெடுப்பதில், கல்வி சார்ந்த அரசாங்க சார்பற்ற   அமைப்புகள்,  பெற்றோர் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!