Latestமலேசியா

பள்ளிப் பாடப் புத்தகங்களை மின்னியல் வடிவில் பெறலாம்: கல்வியமைச்சர் 

கோலாலம்பூர், ஜன 14 – கல்வியமைச்சு,  Kota Buku  கழகத்துடன்  இணைந்து  மாணவர்களுக்கான  ‘KPM eTextbook Reader’ எனும்  மின்னியல்  புத்தகத்தை மேம்படுத்தியுள்ளது.

textbook.moe.gov.my எனும்  அகப்பக்கத்தின் வாயிலாக  அந்த மின்னியல் புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் ;  கைபேசிகளில் உள்ள Google Play Store, Apple  App Store  ஆகியவற்றின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
ஒரு முறை கையடக்க கருவிகள் அல்லது கணினியில் இந்த மின்னியல் புத்தகத்தை பதிவிறக்கம் செய்தப் பின்னர், மீண்டும் அதை திறந்து படிப்பதற்கு இணையம் தேவைப்படாது.

மின்னியல் புத்தகம் எதிர்காலத்தில், புதிய புத்தகங்களை அச்சிடுவதற்கான  செலவைக் குறைக்கும்.  மாணவர்கள் பள்ளிகளுக்கு  அதிகம் புத்தகங்களை சுமந்து செல்லும் சுமையையும் குறைக்கும் என, கல்வியமைச்சு அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!