Latestமலேசியா

பள்ளி திறப்பதற்கு முன்பாகவே 55,000 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி மருந்து

கோலாலம்பூர். பிப் 23- பள்ளி திறப்பதற்கு முன்னதாகவே முதல் கட்டமாக 55, 539 ஆசிரியர்களுக்கு முதல் கட்ட தடுப்பூசியை போடுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவ பணியாளர்கள் , அமலாக்க உறுப்பினர்கள் , அரசாங்க அதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முதல் கட்டமாக கோவிட் தடுப்பூசி போடப்படும் பட்டியலில் கல்வித்துறையைச் சேர்ந்த தரப்பினரையும் சேர்த்துக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சியை மேற்கொண்டதாக அறிவியல், தொழிற்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சரான கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

தொற்றுக்கான ஆபத்து அதிகம் உள்ள பிரிவில் 55,539 ஆசிரியர்களின் பட்டியலை கல்வி அமைச்சு தயாரித்துள்ளது. கோவிட் தடுப்பூசி போடும் முதல் கட்ட பட்டியலிலில் கல்வித்துறையைச் சேர்ந்தவர்களையும் சேர்த்துக்கொள்ளும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக கைரி கூறினார். பள்ளிகள் மார்ச் மாதம் தொடங்கப்படும். கடந்த ஆண்டு ஜூலை மாதம்வரை நாடு முழுவதிலும் 4,987,401 மாணவர்களுக்கு 416,743 ஆசிரியர்கள் போதித்து வருவதாக கல்வி அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!