இந்தியா

பாகுபலி இயக்குனர் ராஜமெளலி & குடும்பத்தினருக்கு கோவிட்-19 உறுதி

ஜூலை 31 – அதிக வசூலை அள்ளிக் குவித்த படமான பாகுபலி திரைப்படத்தின் இயக்குனர் ராஜமெளலி தனக்கும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் கோவிட்-19 தொற்று கண்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் சற்று காய்ச்சல் கண்டிருந்ததாகவும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் லேசான அறிகுறியுடன் கோவிட்-19 தொற்று கண்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மருத்துவரின் ஆலோசனைப்படி தற்போது நாங்கள் அனைவரும் வீட்டில் தனித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
2 பிள்ளைகளுக்கு தந்தையான இயக்குனர் ராஜமெளலி தானும் தனது குடும்பத்தினரின் உடல்நலத்தில் முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பதாக பிரபல கலைக் குடும்பமான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வரியா ராய் மற்றும் அவர்களது மகளான ஆராதனா ஆகியோருக்கும் கோவிட் தொற்று கண்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!