
கோலாலம்பூர், ஜன 3 – அடுத்த பொதுத் தேர்தலில், பாகோ (Pagoh) நாடாளுமன்றத் தொகுதியைத் தற்காத்துக் கொள்ள, பெர்சாத்து கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ முகிடின் யாசினுக்கு, ஜோகூர் மாநில அம்னோ தலைமைத்துவம் வழங்கியிருக்கிருக்கும் அனுமதிக்கு, பாகோ அம்னோ தொகுதி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அத்தொகுதியின் உறுப்பினர்கள் , ஒட்டுமொத்தமாக மாநில அம்னோ தலைமைத்துவத்தின் அந்த முடிவ எதிர்ப்பதாக, பாகோ அம்னோ தலைவர் இஸ்மாயில் முகமட் தெரிவித்தார்.
ஜோகூரில் 25 இடங்களில் தேசிய முன்னணி கூட்டணி கட்சிகள் போட்டியிடும் வேளை , பாகோ–வில் அக்கூட்டணி போட்டியிடாது என கடந்த நவம்பரில் ஜோகூர் அம்னோ தலைமைத்துவம் முடிவெடுத்ததாக, அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ அடாம் பாபா நேற்று கூறியிருந்தார்.
டான் ஶ்ரீ முகிதின் யாசின் , அம்னோவைப் பிரதிநிதித்து கடந்த 1978-ஆம் ஆண்டு முதல் பாகோ தொகுதியை தற்காத்துக் கொண்டுள்ளார். அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட அவர் தற்போது பெர்சாத்து கட்சியின் தலைவராக உள்ளார்.
எனினும், ஜோகூரில் முகிதின் வென்றுள்ள கம்பிர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படுமா என தெரிவிக்கப்படவில்லை.
பாகோ நாடாளுமன்ற தொகுதியுடன் , அம்மாநிலத்தில் செகாமாட் ( சந்தாரா நாயர் ) நாடாளுமன்றத் தொகுதியும், பத்து பஹாட் ( ரஷிட் ஹஸ்னோன்) நாடாளுமன்றத் தொகுதியும் பெர்சாத்து கட்சியின் வசமுள்ளது.