Latestசினிமா

பாடகர் எஸ்.பி பாலாவின் நல்லுடலுக்கு திரையுலக பிரமுகர்கள் உட்பட ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

சென்னை, செப் 26 – மறைந்த பாடகர் எஸ்,பி.பாலாவின் நல்லுடல் இன்று சென்னைக்கு அருகே தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை விட்டில் நல்லடக்கம் செய்ய்ப்படும். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்து வந்த பாடும் நிலா எஸ்,பி பாலா வெள்ளிக்கிழமை மாரடைப்பினால் காலாமானார். தனியார் மருத்துவமனையிலிருந்து நேற்று மாலை அவரது உடல் நுங்கம்பாக்கம் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

திரையுலகத்தைச் சேர்ந்த பல கலைஞர்கள் , ரசிகர்கள் அரசியல் பிரமுகர்கள் உட்பட வாழ்க்கையின் பல தரப்பட்ட மக்கள் அவரது நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இசை மழை வழங்கிய எஸ்,பி,பாலாவுக்கு பொதுமக்களும் அவரது ரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சிலர் துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுதனர்.

மலேசிய நேரப்படி இன்று நண்பகல் மணி 1.30 பண்ணை வீட்டின் ஒரு பகுதியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!