
சென்னை, டிச 9 – விஜய் டிவி பிரபல பாண்டியன் ஸ்டோர் சின்னத்திரையில் நடிகை சித்ரா சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இன்று அதிகாலையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத் என்பவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த போது சித்ரா இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்த சித்ரா, பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரம் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.
இவருடைய தற்கொலைக்கான காரணத்தை போலிசார் ஆராய்ந்து வருகின்றனர்.