Latestமலேசியா

பாம்பு தீண்டப்பட்ட ஆடவர் ; நடந்தே மருத்துவமனைக்கு தூக்கி வந்த தீயணைப்பு வீரர்கள்

கோலா பெராங், அக் 23-  காட்டில் பாம்பு தீண்டியதால் பாதிக்கப்பட்ட  வனவிலங்கு பூங்காத்துறையின் ஊழியரை,    4 மணி நேரம் நடந்தே சென்று அங்கிருந்து அவரை தூக்கி வந்த தீயணைப்பு படை வீரர்கள்  மருத்துவமனையில் சேர்த்தனர். பாதுகாக்கப்பட்ட  செகாயு  (Sekayu) காட்டுப் பகுதியில் பயிற்சியில்  கலந்துகொண்ட  24 வயதுடைய முகமட் இம்ரான்  காஷிமான் கமாருல்ஷாமானின்  கால் பாதத்திற்கு மேல்  பாம்பு தீண்டியது.

நேற்று மாலை மணி 3.50 அளவில் இது குறித்து  தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து  கோலா பெராங் ( Kuala Berang) தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 8 தீயணைப்பு வீரர்கள் அங்கு  அனுப்பி வைக்கப்பட்டனர்.  ஆனால்,  அந்த வனப் பகுதியில்  வாகனம் செல்வதற்கு முறையான பாதை இல்லை என்பதால்  சுமார்  4 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் நடந்தே சென்று  பாதிக்கப்பட்ட நபரைக்  கண்டனர். அதன்பின் அவரைத்  தூக்குப் படுக்கையில்  வைத்து  தூக்கிக்கொண்டு காட்டிலிருந்து  வெளியேறியதாகத்  தீயணைப்பு  நிலையத்தின்  அதிகாரி   ஹனாபி முகமட் தெரிவித்தார்.

காட்டில் 6 கிலோமீட்டர்  தூரம் நடந்துச் சென்றதோடு  இடையில்  ஆறையும் கடந்த செல்ல வேண்டியிருந்தது. இரவு   8,30 மணியளவில் இந்த மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்தது. அங்கிருந்து மீட்கப்பட்ட வனவிலங்கு பூங்கா துறை ஊழியர் முகமட் இப்ரான்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நடவடிக்கையின்போது பல்வேறு சவால்களையும் சிரமங்களையும்  தீயணைப்பு படையினர் சந்தித்தபோதிலும்  ஒரு  உயிரை காப்பாற்றிய திருப்தி தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக  அந்த நடவடிக்கையில் கலந்துகொண்ட தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!