Latestமலேசியாவிளையாட்டு

பாராலிம்பிக்; தேசிய அம்பெய்தும் வீரர் சுரேஷ் அடுத்த சுற்றுக்கு முன்னேறத் தவறினார்  

தோக்யோ, செப் 3- தொக்யோ  பாராலிம்பிக்கில்   இன்று காலை நடைபெற்ற போட்டியில் தேசிய அம்பெய்யும் வீரர் எஸ்.சுரேஷ் முதல் சுற்றிலேயே  தேல்வியைத் தழுவினார்.

போட்டியின்போது ஏற்பட்ட  மழையாலும், காற்றின் திசையை அறிவதில்  ஏற்பட்ட தடுமாற்றத்தினாலும்  வெற்றி தன் வசமாகவில்லை  என  அவர் தெரிவித்தார்.

கோவிட் பெருந்தொற்றினால், 2019-ஆம் ஆண்டு தொடங்கி  அனைத்துலக போட்டிகளில் பங்கேற்று ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பினை  இழந்ததாலும்,  தொக்யோ பாராலிம்பிக்கில் சிறந்த ஆற்றலை தம்மால் வெளிப்படுத்த முடியாமல் போனதாக   சுரேஷ்  கூறினார்.

கெடா, சுங்கை பட்டாணி,குவாலா கெட்டிலைச் ( Kuala Ketil) சேர்ந்த 28 வயதான சுரேஷ், 2019-இல் உலக பாரா அம்பெய்தும் போட்டியில் தங்கம் வென்றார்   என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!