Latestஉலகம்

பார்வையாளர்கள் முன்னிலையில் பூங்கா காப்பாளரை கடித்து குதறிய கரடிகள்

ஷங்காய், அக் 20- சீனாவில் ஷங்காய் உயிரியில் பூங்காவில் பார்வையாளர்கள் முன்னிலையில் பூங்கா காப்பாளர் ஒருவரை கரடிகள் கடித்துக் குதறின. கடுமையான காயத்திற்குள்ளான பூங்கா காப்பாளர் மரணம் அடைந்தார். ஷங்காய் உயிரியல் பூங்காவில் விலங்குகள் சுதந்திரமான நடமாடுவதை பார்வையாளர்கள் பாதுகாப்பான வாகனங்களில் இருந்தவண்ணம் பார்க்க முடியும்.

அந்த பூங்காவில் திடீரென கரடிகள் கூட்டம் ஒன்று அங்கிருந்த பூங்கா காப்பாளரை கடித்து குதறி சாப்பிடுகின்றன. இது தொடர்பான காணொளிக் காட்சி சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் சமுக ஊடகங்களிலும் ஆடவர் ஒருவரை கரடிகள் கடித்து குதறுவதையும், வாகனம் ஒன்றில் பயணிக்கும் பார்வையாளர்கள் அதைக் கண்டு பதறுவதையும் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளதாகவும் நம்பப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அந்த பூங்காவின் சில பகுதி மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!