
இந்தியா, டிச 24 – அண்மையில் வெளியான பாவக்கதைகள் எனும் ஆந்தாலஜியை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், கெளதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்மிப்படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதையும் ஆவணக்கொலை, சாதி பெருமை, தன் பாலின ஈர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.
இந்த ஆந்தாலஜியை திரையரங்குகளில் வெளியிட முடியாத காரணத்தினால் நெட்ஃபிளிக்ஸ் எனும் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.
சுதா கொங்கரா இயக்கிய ‘தங்கம்’ என்ற கதையில் நடிகர் சாந்தனு தங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வேளையில், இப்படத்தைப் பார்த்த நடிகர் விஜய் அவரின் நடிப்பைப் பாராட்டியதோடு, இதுதான் புது சாந்தனுவா என்றும் கேட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.