
புத்ராஜெயா, செப் 16 – பிகேபிபி (PKPP) எனும் மீட்சியிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதன் தொடர்பில் நேற்று 68 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தனிமைப்படுத்தப் பட்ட போது விதிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தத் தவறிய மூவரும் அவர்களில் அடங்குவர் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
கைதானவர்களில் 66 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள வேளையில் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று நாடு முழுவதும் ஏறக்குறைய 60 ஆயிரம் இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. பேரங்காடிகள், உணவகங்கள், தொழிற்சாலைகள், அங்காடி கடைகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவை சோதனைக்கு உட்படுத்தப் பட்டிருந்ததாக டத்தோஸ்ரீ இஸ்மாயில் கூறினார்.