Latestமலேசியா

பிகேபிபி – விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத இரவு விடுதிகள் மீது இனி கடும் நடவடிக்கை!

கோலாலம்பூர், செப் 1 – பிகேபிபி எனும் மீட்சியிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலகட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் இரவு விடுதி மற்றும் மதுபான விடுதிகளின் உரிமையாளர்கள் மீது இனி கடும் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.
அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்துவது, உரிமங்களை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளும் அதில் அடங்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

பிகேபிபி காலகட்டத்தில் மதுபான விடுதிகள் மற்றும் இரவு விடுதிகள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை.
நேற்று நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காகக் கைது செய்யப்பட்ட 778 பேரில் 600 பேர், இரவு விடுதிகளிலும் மதுபான விடுதிகளிலும் இருந்தவர்கள் ஆவர்.
பலர் மதுபான விடுதிகளிலும் இரவு விடுதிகளிலும் ஒன்று கூடி தேசிய தினத்தைக் கொண்டாடியிருக்கலாம். அதனால் தான் நேற்று அம்மையங்களில் கைதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருப்பதாக, அமைச்சர் விவரித்தார்.

மீட்சியிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்ததில் இருந்து இதுவரை, ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கைதாகியிருப்பது இதுவே முதன் முறை.
இரவு விடுதிகள் மற்றும் மதுபான விடுதிகளைத் திறக்க அரசாங்கம் இன்னும் அனுமதி வழங்காத நிலையில், அதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், அவை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது என அமைச்சர் கூறினார்.

எனவே இவர்களின் இந்த பொறுப்பற்ற செயல்களை இனியும் அனுமதிக்க முடியாது எனக் கூறிய டத்தோஸ்ரீ இஸ்மாயில், இனி கடும் நடவடிக்கையை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!