Latestஉலகம்

பிணப்பெட்டியில் அண்ணனை தம்பி உயிருடன் அடைத்த சம்பவம் – உயிரிழந்தார் முதியவர்

சேலம், அக் 17 – தமிழ்நாடு சேலம் மாவட்டத்தில் தம்பியால் உயிருடன் பிணப்பெட்டியில் 5 மணிநேரம் அடைத்து வைக்கப்பட்டிருந்த 74 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்பாக தனது அண்ணன் இறந்து விட்டதாகக் கூறிய தம்பி தனது அண்ணனை உயிருடன் பிணப்பெட்டியில் அடைத்து வைத்த சம்பவம் அவ்வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

70 வயது சரவணன் என்பவர் தனது 74 வயது அண்ணனான பாலசுப்ரமணிய குமார் என்பவர் இறந்து விட்டதாகக் கூறி குளிர்சாதன சவப்பெட்டியை வாடகைக்கு எடுத்துள்ளார். சவப்பெட்டியை வாடகைக்கு கொடுத்த கடையின் ஊழியர்கள் மறுநாள் அப்பெட்டியை எடுத்துக் கொள்ள வந்தபோது சவப்பெட்டியில் முதியவர் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் உயிருடன் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏன் அம்முதியவரை சவப்பெட்டியில் வைத்துள்ளீர்கள் என அந்த ஊழியர்கள் வினவிய போது, “ அவர் என் அண்ணன் தான்.. இன்னும் சற்று நேரத்தில் இறந்து விடுவார் என பதிலளித்துள்ளார் தம்பி சரவணன். அதனைத் தொடர்ந்து, அந்த ஊழியர்கள் மருத்துவமனைக்கும் போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி அம்முதியவர் உயிரிழந்தார். இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக சரவணன் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!