Latestமலேசியா

பினாங்கில் வெளிநாட்டு தொழிலாளர்களில் 70,000 த்திற்கும் மேற்பட்டோர் இன்னும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளவில்லை

பினாங்கு, பிப் 23 – பினாங்கு மாநிலத்தில் இன்னமும் 78,800 வெளிநாட்டு தொழிலாளர்கள் இன்னும் கோவிட் பரிசோதனையை மேற்கொள்ளவில்லையென மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்டிப் சிங் டியோ தெரிவித்தார். பினாங்கில் பதிவுபெற்ற 135,490 வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்ளனர்.

பிப்ரவரி 21 ஆம் தேதிவரை 56,610 வெளிநாட்டு தொழிலாளர்கள் கோவிட் 19 மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் 2,153 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளானது உறுதிப்படுத்தப்பட்டது. தொற்றுக்கு உள்ளானவர்கள் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான குடியிருப்பில் தங்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டனர். தொற்று மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்கும் பொருட்டு வெளிநாட்டு தொழிலாளர்கள் தொழிற்சாலைகள் இருக்கும் பகுதியில் அமைந்துள்ள காலி இடத்தில் தங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!