Latestமலேசியா

பிரதமருடன் இரவு விருந்து : விவியோனா மாணவி நெகிழ்ச்சி

கோலாலம்பூர், செப் 14 – பிரதமர் முஹிடின் யாசினுடன் இரவு விருந்தில் கலந்துகொள்வதற்கு தமக்கும் தமது பெற்றோர்களுக்கும் விடுக்கப்பட்ட அழைப்புக்காக மலேசிய சபா பல்கலைக்கழக மாணவி விவியோனா மோஷிபின் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார். நாட்டின் உயரிய தலைவராக விளங்கிவரும் பிரதமருடன் இரவு உணவு உட்கொள்வதற்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்பு மறக்க முடியாத இனிமையான நினைவு என தமது இன்ஸ்டாகிரேமில் பதிவேற்றம் செய்த தகவலில் விவியோனா தெரிவித்தார்.
எளிமையான அற்புதமான மனிதராக பிரதமர் திகழ்வதாக அவர் வருணித்தார். நாட்டின் 8ஆவது பிரதமருடன் இரவு உணவு விருந்தில் கலந்துகொள்ளும்படி தமக்கும் தமது பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்ட வாய்ப்பை மிகப்பெரிய கௌரவமாக கருதுவதாகவும் அவர் சொன்னார். இணைய வசதிக்காக மரத்தின் மேலே அமர்ந்து விவியோனா பல்கலைக்கழக பாடங்களை படிக்கும் காணொளி கடந்த ஜூன் மாதம் வெளியானது முதல் சமுக வலைத்தளத்தில் அவர் வைரலானார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!