Latestஉலகம்

பிளாஸ்டிக் போத்தல்களில் கொடுரமாக அடைக்கப்பட்டு வெளிநாட்டிற்கு கடத்தபடவிருந்த கிளிகள் முறியடிப்பு

ஜகார்த்தா, நவ 21- அழகான பல்வேறு நிறங்களைக் கொண்ட கிளிகள் பிளாஸ்டிக் போத்தலில் அடைக்கப்பட்டு கடத்தப்படவிருந்ததை இந்தோனேசிய அதிகாரிகள் முறியடித்தனர்.

ஆசியாவிலேயே அதிக அளவில் அழிந்துவரும் பறவை இனங்களுக்கு புகலிடமாக இந்தோனேசியா திகழ்ந்து வருகிறது. ஆனால் அங்குதான் பெரிய அளவில் அபூர்வமான பறவைகளை கடத்தி அனைத்துலக ரீதியில் அவற்றை கடத்தும் சட்டவிரோத பறவைகள் வர்த்தகமும் நடைபெற்று வருவதாக பி.பி.சி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு பிரேதேசமான பப்வுவா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்து சத்தம் வந்ததைத் தொடர்ந்து வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்படுவதற்காக பிளாஸ்டிக் போட்டலில் அடைக்கப்பட்டிருந்த 64 கிளிகளை அதிகாரிகள் உயிருடன் மீட்டனர். 10 கிளிகள் அந்த பிளாஸ்டிக் போட்டலில் இறந்து கிடந்தன.

இந்தோனேசியாவில் கிளிகள் மட்டுமின்றி பல்வேறு பறவைகள் பெரிய அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. துறைமுக நகரான ஃபக்பக்கில் (Fakfak) வியாழக்கிழமை கப்பலில் ஏற்றப்பட்டிருந்த கிளிகள் எந்த நாட்டிற்கு கடத்திச் செல்லப்பட இருந்தன என்பது தெரியவில்லை என உள்ளூர் போலீஸ் அதிகாரியான டோடிக் ஜூனைடி (Dodik Junaidi) கூறினார்.

வழக்கத்திற்கு மாறான சத்தம் கேட்டதால் கப்பலில் ஏதோ பிராணிகள் இருக்கக்கூடும் என கப்பல் ஊழியர்கள் சந்தேகித்தனர். ஆனால் அங்குள்ள ஒரு பெட்டிக்குள் இருந்து பிளாஸ்டிக் போத்தலில் பிளேக் கேப்ட் லோரிஸ் ( Black Capped Lorries) வகையைச் சேர்ந்த கிளிகள் என அடையாளம் கூறப்பட்டது. இந்த வகை கிளிகள் பெரும்பாலும் நியூ கினி மற்றும் தென் மேற்கு பசிபிக் பெருங்கடல் தீவுகளில் அதிகமாக இருந்து வருகின்றன.

பிளாஸ்டிக் பாட்டில்களில் பறவைகள் அடைத்து வைத்து கடத்தப்படுவது புதிதல்ல. 2015ஆம் ஆண்டு, அழியும் விளிம்பில் இருக்கும் எல்லோ- கிரெஸ்ட்டேட் காக்கடூஸ் (yellow-crested cockatoos) என்ற 21 பறவைகளை பாட்டில்களில் கடத்தியதற்காக இந்தோனீசிய போலீசார் ஆடவர் ஒருவரை கைது செய்தனர்.

2017ல் 125 வெளிநாட்டுப் பறவைகளை வடிகால் குழாய்களில் வைத்து கடத்தியதாக பலர் கைது செய்யப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!