Latestமலேசியா

பி.ஜே ஒல் டவுன் பகுதியில் இந்தியர்கள் உட்பட 200 சட்டவிரோத குடியேறிகள் கைது

பெட்டாலிங் ஜெயா, மே 21 – பெட்டாலிங் ஜெயா ஒல் டவுன் (Old Town) வட்டாரத்தில் இந்தியர்கள் உட்பட 200 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். ஆவணமற்ற இந்தியப் பிரஜைகளுடன் இந்தோனேசியர்கள், வங்காளதேசிகள் மற்றும் பாகிஸ்தானியர்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குனர் டத்தோ கைருல் ஸைமி டாவுட் ( KHAIRUL DZAIMEE DAUD} தெரிவித்தார்.

குடிநுழைவுத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போது இந்த சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். நேற்று காலை முதல் அங்கு களம் இறக்கப்பட்ட குடிநுழைவு மற்றும் போலீஸ் அதிகாரிகள் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான வேட்டையை தொடங்கியதாக தெரிகிறது. இதற்கு முன் அங்கு போலீஸ் மற்றும் குடிநுழைவுத்துறையின் டிரக்குகள் நிறுத்தப்பட்டிருந்தன.

முறையான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டு குடியேறிகள் கைது செய்யப்பட்டதை கைருல் ஸைமி உறுதிப்படுத்தினார். பெட்டாலிங் ஜெயா old townனில் வலுப்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட காலக்கட்டம் மே 23ஆம்தேதி முடிவடைவதற்கு மூன்று தினங்களுக்கு முன்னதாகவே மீட்கப்படும் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் நிக் இஷானி முகமட் பைசால் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!