Latestமலேசியா

புகாரை மீட்டுக் கொண்டார் பவித்ரா, கணவர் சுகுவை நீதிமன்றம் விடுவித்தது!

ஈப்போ, செப் 17 – யூடியூப் சமையல் புகழ் எஸ்.பவித்ராவைத் தாக்கிக் காயப் படுத்தியதாகத் தொடரப் பட்டிருந்த வழக்கில் இருந்து அவரது கணவர் எம்.சுகுவை ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது. ஆயினும் அவர் இவ்வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை செய்யப்படவில்லை.

கணவர் சுகுவுக்கு எதிரான புகாரை தாம் யாரின் நிர்பந்தமும், கட்டாயமும், மிரட்டலும் இல்லாமல், சுய விருப்பத்தின் பேரில் மீட்டுக் கொள்வதாக, பவித்ரா இன்று நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்ததை அடுத்து, சுகுவை இவ்வழக்கில் இருந்து விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

தேவை ஏற்பட்டால் சுகு மீது மீண்டும் இவ்வழக்கில் குற்றஞ்சாட்ட அரசு தரப்புக்கு அதிகாரம் இருப்பதைக் கருத்தில் கொண்டு அவரை இவ்வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை செய்ய வேண்டாம் என அரசு தரப்பு துணை வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நீதிபதி இத்தீர்ப்பை அறிவித்தார்.

கடந்த ஜூலை 21ஆம் தேதி, ராஜா பெர்மைசூரி பைனூன் (Raja Permaisuri Bainun) மருத்துவமனையின் கார் நிறுத்துமிடத்தில் தமது மனைவி பவித்ராவை கைப்பேசி மற்றும் சிறிய ரக அரிவாளின் கைப்பிடியைக் கொண்டு தாக்கி, வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக சுகு மீது வழக்கு தொடரப் பட்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!