Latestமலேசியா

புதிதாக 8பேருக்கு கோவிட் தொற்று ஒருவர் மரணம்

கோலாலம்பூர், ஜூலை 11- புதிதாக 8பேர் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகினர். இதன் வழி கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 8,704ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 67பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24மணி நேரத்தில் 4பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்வழி கோவிட் தொற்றிலிருந்து 8,515பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். புதிதாக தொற்றுக்குள்ளான 8பேரில் நால்வர் வெளிநாட்டில் இருந்தபோது தொற்றுக்கு உள்ளாகினர். இருவரில் ஒருவர் சபாவிலும் மற்றொருவர் சரவாவிலும் தொற்றுக்கு உள்ளாகினர்.

இதுதவிர இருவர் சிப்பாங் தடுப்பு முகாமில் தொற்றுக்குள்ளான வெளிநாட்டினர் ஆவர். மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவருக்கு செயற்கை சுவாச கருவியின் உதவியோடு சிசிக்சை வழங்கப்பட்டு வருகிறது.
அதோடு ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.

இதன் வழி கோவிட் தொற்றினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது. சரவாவைச் சேர்ந்த 72 வயதுடைய அந்த நபர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவுனால் பாதிக்கப்பட்டிருந்தார் என டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!