
புதுவை, பிப் 22 – சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததைத் தொடர்ந்து புதுச்சேரி மாநில அரசாங்கம் கவிழ்ந்தது.
இன்று காலை 10 மணி அளவில் புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் -திமுக கூட்டணி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
30 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்தில் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான கூட்டணி அரசாங்கம் யபெரும்பான்மையை இழந்ததால் அவர் கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததாக சட்டமன்ற சபாநாயகர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நாராயணசாமி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனிடம் சமர்ப்பித்தார்.