
புதுச்சேரி, பிப் 18- புதுவை மாநில துணை நிலை கவர்னராக இருந்த கிரேன்பேடியை மத்திய அரசாங்கம் மீட்டுக்கொண்டதை தொடர்ந்து தெலுக்கானா கவர்னராக இருக்கும் டாக்டர் தமிழிசை சௌந்தராஜன் புதுச்சேரி மாநில கவனர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்துக்கொள்வார். இன்று காலையில் புதுச்சேரி துணை நிலை கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி டாக்டர் தமிழிசைக்கு பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.
டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழ் மொழியிலேயே உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும் கலந்துகொண்டார்.
புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும் துணை நிலை கவர்னராக இருந்த கிரான்பேடிக்குமிடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. அவரை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாகவே நாராயணசாமி கோரிக்கை விடுத்து வந்தார். கிரேன்பேடியை மீட்டுக்கொள்வதாக இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அறிவித்தார்.