
புதுவை, பிப் 22- புதுச்சேரியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவி விலகியதைத் தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் –திமுக கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்தது . மாநில அரசாங்கம் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். சட்டமன்றம் கூடுவதற்கு முன் இப்போதைய அரசியல் நெருக்கடி குறித்து தனது முடிவை அறிவிக்கப்போவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமியின் அரசுக்கு எம்,எல்.ஏக்களின் பலம் 11 ஆக குறைந்துள்ளது. தற்போது ஆளும் கட்சி கூட்டணியில் 11 சட்டமன்ற உறுப்பினர்களே உள்ளனர். இதனால் பெரும்பான்மையை நிருபிப்பதிலும் முதலமைச்சர் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று புதுச்சேரி சட்டமன்றம் கூடுகிறது.