Latestமலேசியா

பெட்டாலிங் ஜெயா அடுக்குமாடி வீட்டில் தீ; 72 வயது முதியவர் பலி

பெட்டாலிங் ஜெயா, அக் 17 – தாமான் ஸ்ரீ மஞ்சா அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியிலுள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 72 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

இரவு 9.51 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவத் தளம் விரைந்த தீயணைப்பு மற்றும் மீற்பு குழுவினர் இரவு 10.15 மணியளவில் தீயை கட்டுபாட்டுக்கு கொண்டு வந்தனர் என நடவடிக்கை குழுவின் அதிகாரி சூல்விஃகார் ஜாவார் (Zulfikar Jaffar) தெரிவித்தார்.

அவ்வீட்டில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வீட்டின் சமயலறையில் முழுமையான தீக்காயங்களுடன் ஆடவர் ஒருவர் இறந்துக் கிடந்ததைத் தீயணைப்பு படையினர் கண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் மருத்துவ பரிசோதனைக்காக மலாயா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!