Latest

வேட்டை துப்பாக்கியையும், 200 தோட்டாக்களையும் காணவில்லை ; தம்பினில் ஆடவர் அதிர்ச்சி

தம்பின், மார்ச் 28 – “ஷுட்கன்” 12 போர் ரக துப்பாக்கியும், 200 தோட்டாக்களும் மாயமானதால் ஆடவர் ஒருவர் அதிர்ச்சியடைந்தார்.

நெகிரி செம்பிலான், தம்பின், கம்போங் ஆயிர் கூனிங் செலாத்தான் கிராமத்திலுள்ள அவ்வாடவரின் வீட்டை உடைத்து கொள்ளையிட்ட கொள்ளையர்கள் அந்த துப்பாக்கியையும், தோட்டாக்களையும் களவாடிச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

நேற்று மாலை மணி 2.30-க்கும் இரவு மணி எட்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில், அந்த 60 வயது ஆடவர் கெமாசுக்கு சென்றிருந்த பொது அச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

அச்சம்பவம் தொடர்பில், இரவு மணி 9.51 வாக்கில் தமக்கு தகவல் கிடைத்ததை, தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அமிருடின் சரிமான் உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!