Latestவிளையாட்டு

பேட்மிண்டன் விளையாட்டிலிருந்து லின் டான் ஓய்வு பெறுகிறார்

பெய்ஜிங் , ஜூலை 4 – ஒலிம்பிக் போட்டியில் இரு முறை தங்கப் பதக்கத்தை வென்ற சீனாவின் முன்னணி பேட்மிண்டன் வீரரான லின் டான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவ்வளவு நாட்களாக தமக்கு பெரும் ஒத்துழைப்யைபும் உற்சாகத்தையும் வழங்கிவந்த குடும்பத்தினர் மற்றும் பேட்மிண்டன் ரசிகர்களுக்கும் அவர் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்ற லின் டான் இதன்வழி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்பது இப்போது உறுதியாகிவிட்டது. பேட்மிண்டன் ரசிகர்களிடையே சூப்பர் டான் என்று அழைக்கப்படும் லின் டான் 20 ஆண்டு காலம் சீன பேட்மிண்டன் குழுவில் இடம் பெற்றிருந்தார்.
2000ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டுவரை 20 ஆண்டுகள் தேசிய குழுவில் விளையாடிய பின் இப்போது கணத்த இதயத்தோடு ஓய்வு பெறுவதாக அவர் சொன்னார். உடலில் ஏற்பட்ட காயத்தினால் தொடர்ந்து விளையாட முடியாதது குறித்து வருத்தம் அடைவதாக 37 வயதுடைய லின் டான் தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டி, உலக சாம்பியன்ஷீப், உலகக் கிண்ணம், தாமஸ் கிண்ணம், சுடிர்மான் கிண்ணம்., அகில இங்கிலாந்து பேட்மிண்டன், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய சாம்பியன்ஸிப் ஆகிய உலகின் 9 கிரேன் ஸ்லேம் பேட்மிண்டன் விருதுகளை 28 வயதில் வென்ற விளையாட்டாளர் என பெருமையையும் லின் டான் பெற்றுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!