Latestமலேசியா

செமோர் கம்போங் உலு குவாங்கில் மற்றொரு புலி நடமாட்டம்

ஈப்போ , நவ 14 – பேரா, செமோர், கம்போங் உலு குவாங்கில் புலி நடமாட்டம் இருக்கும் தகவலை பேரா தாமான் நெகாரா மற்றும் வனவிலங்குத்துறை பெற்றுள்ளதாக அதன் இயக்குனர் யூசுஃப் ஷரீப் தெரிவித்திருக்கிறார். அங்குள்ள கிராமவாசி ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் புலியின் கால் பாத சுவடுகளை தாங்கள் கண்டறிந்துள்ளதாகவும் அவர் கூறினார். கம்போங் உலு குவாங்கிற்கு அருகேயுள்ள புக்கிட் கிந்தா பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியிலுள்ள புலி வெளியேறும் மற்றும் உள்ளே செல்லும் பகுதியில் அந்த பிராணியை கண்டறியும் கேமரா பொரி பொருத்தப்பட்டுள்ளது.

120 கிலோ எடையுள்ளதாக நம்பப்படும் அந்த புலியின் நடமாட்டம் குறித்து மிகவும் விழிப்பாக இருக்கும்படி கிராமவாசிகளை யூசுஃப் ஷரீப் கேட்டுக்கொண்டார். நேற்று முன் தினம் இரவு ஏழு மணியளவில் தமது கார் சென்று கொண்டிருந்த இடத்திலிருந்த ஏழு மீட்டர் தொலைவில் சாலையை புலி கடந்து சென்றதை கண்டதாக கம்போங் உலு குவாங் கிராமத்தை சேர்ந்த குடியிருப்புவாசியான 63 வயதுடைய முகமட் கைரி ஷஃபி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!