Latestமலேசியா

பேராக்கில் வெள்ளம் மோசமடைந்துள்ளது

ஈப்போ, நவ 22 –  பேராக்கில் நேற்றிரவு வெள்ளப் பாதிப்பு மோசமடைந்ததை அடுத்து,  அதிகமானோர்  வெள்ளத் துயர் மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.

நேற்று இரவு மணி ஒன்பது வரையில் வெள்ளத் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் பெற்றவர்களின் எண்ணிக்கை 319 ஆக இருந்தது.

இன்று அதிகாலை மணி ஆறுக்கு அந்த எண்ணிக்கை  736 ஆக அதிகரித்ததாக, மாநில  பேரிடர் நிர்வாக செயலகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

லாருட் , மாதாங் , செலாமா ஆகிய மூன்று மாவட்டங்கள் (Larut, Matang,Selama ) வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

அந்த மூன்று மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள நான்கு துயர் துடைப்பு மையங்களில் 569 பேர் தங்கியுள்ளனர்.

நேற்று மாலை மணி ஏழுக்கு செலாமாவில் திறக்கப்பட்ட மேலுமொரு துயர் துடைப்பு மையத்தில்  364 பேர் அடைக்கலம் பெற்றிருக்கின்றனர்.

மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றும் நடவடிக்கையில் ,  தீயணைப்பு மீட்பு படையினர், பொது தற்காப்பு படையினர், போலீஸ் படையினர், ரேலா தன்னார்வலர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!