Latestமலேசியா

பேரா சட்டமன்றம் கலைக்கப்படாது !

ஈப்போ, டிச 4  – பேரா சட்டமன்றம் கலைக்கப்படாது. நம்பிக்கை தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் தோல்வி கண்டு பதவி விலகிச் செல்லும் மந்திரிபெசார்  அகமட் பைசால்  அசுமு இதனை தெரிவித்தார்.  கோவிட்  தொற்று பரவியிருப்பதால்  இப்போதைய நிலையில் தேர்தலுக்காக சட்டமன்றத்தை கலைக்க வேண்டியதில்லையென சுல்தானிடம்  கேட்டுக் கொள்ளப்போவதாக  அவர்  கூறினார்.  நம்பிக்கை தீர்மானத்தில் தோல்வி கண்டதை  திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வதாக செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்தார். இதனிடையே  பேரா மந்திரி பெசார் பதவிக்கு மாநில அம்னோ நிர்வாகக் குழு உறுப்பினர்களின்  இருவரின் பெயர்கள் அடிபடுகிறது.

ருங்கூப் (Rungkup) சட்டமன்ற உறுப்பினர் ஷாருல்  ஷாமான் யஹ்யா,  மற்றும்  பேரா அம்னோ தொடர்பு குழுத் தலைவர்  ஷரானி  முகமட் ஆகிய இருவரில் ஒருவர் புதிய மந்திரிபுசாராக நியமிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தெரிகிறது.  அம்னோவைச் சேர்ந்த ஒருவர் பேரா மந்திரிபுசாராக நியமிக்கப்படுவார் என கடந்த சில வாரங்களாக  தகவல்கள்  வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று காலை சட்ட மன்ற  கூட்டத்தின் போது நம்பிக்கை வாக்கெடுப்பில்  அகமட் பைசால்  அசுமு  கவிழ்க்கப்பட்டார்.

பேரா அம்னோவைச் சேர்ந்த ஒரு தரப்பு தற்போதைய ஆட்சிக் குழு உறுப்பினரான ஷாருலை மந்திரிபுசார் பதவிக்கு ஆதரிக்கின்றன. அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடியின் பாகான் டத்தோக் ( Bagan Datuk) நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்றம்   ருங்குப் ஆகும்.

அதே வேளையில்   ஷரானி    மலாய்க்காரர்கள், இந்தியர்கள் மற்றும் சீனர்களும்  விரும்பும் தலைவராக திகழ்வதோடு  அனைத்து சமூகங்களுடன் இணைந்து பழகக்கூடியவராகவும்  விளங்குகிறார்,.  62 வயதுடைய அவர் கோத்தா தம்பான் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!